நான் கவலை கொண்ட நாட்களில்
உன்னிடம் வருவேன் ஆறுதல் தேடி
மாரோடு அணைத்து கொள்வாய்!
உன் புடவையின் வியர்வை நாற்றம்
என் மனதில் மாற்றம் சொல்லும்!
தேடிக் கொண்டிருக்கிறேன் அந்த ஆறுதலை
உன் சமாதியின் அருகில்!!!
Monday, March 24, 2008
Tuesday, March 18, 2008
காதல் வந்துருச்சி!!!
காதலை நான் சொன்ன புதிதில்
மௌனம் காத்தாய் - இறுக்கி
அணைத்து இதழ் சேர்த்த பின்புதானடி
தெரிந்தது, உனது காதலும்!!!
முதல் முத்தத்தில்
இணைந்த நம் இதழ்கள்
பரிமாறியது எச்சிலை மட்டும் அல்ல நம் மனங்களையும்தான்!!!
கன்னத்தில் வைத்த
முத்தத்தின் எச்சில்!
இதயத்தில் “காதல் ஜூரம்”
மௌனம் காத்தாய் - இறுக்கி
அணைத்து இதழ் சேர்த்த பின்புதானடி
தெரிந்தது, உனது காதலும்!!!
முதல் முத்தத்தில்
இணைந்த நம் இதழ்கள்
பரிமாறியது எச்சிலை மட்டும் அல்ல நம் மனங்களையும்தான்!!!
கன்னத்தில் வைத்த
முத்தத்தின் எச்சில்!
இதயத்தில் “காதல் ஜூரம்”
Thursday, March 13, 2008
பார்வைகள் பலவிதம்
மனித சிலையில் அம்ர்ந்து
காகம் கேட்டது!
கல்லாகிப் போகத்தான்
ஆறறிவு பெற்றாயா!
சிலை சொன்னது - நான்
கல்லாகவில்லை,
கலையாகிப் போனேன்!!
அதனால்தான்
எனக்கு ஆறறிவு!
உனக்கு ஓரறிவு!!
காகம் கேட்டது!
கல்லாகிப் போகத்தான்
ஆறறிவு பெற்றாயா!
சிலை சொன்னது - நான்
கல்லாகவில்லை,
கலையாகிப் போனேன்!!
அதனால்தான்
எனக்கு ஆறறிவு!
உனக்கு ஓரறிவு!!
பிதாமகன்
மகனுக்கு தெரியும் - இவன்
நம் தந்தை என்று
தந்தை அறியான் - இவன்
நம் பிள்ளை என்று
எதுவும் அறியா வெட்டியான்
கால் நீட்டி படுத்தான்
இருவரின் சமாதி மேலே...
நம் தந்தை என்று
தந்தை அறியான் - இவன்
நம் பிள்ளை என்று
எதுவும் அறியா வெட்டியான்
கால் நீட்டி படுத்தான்
இருவரின் சமாதி மேலே...
அதிகாலை ஒரு நிமிடம்
அதிகாலை வேளை
பால்கனியில் நான் சில்லென்று
ஒரு காற்று மேனியின் வழியே
மனதினை பதம் பார்த்தது!
சூரிய உதயம் உனக்கு பின்னே வரவேண்டும்!
அப்பாவின் அறிவுரை!!
உடம்ப நல்லா பார்த்துக்கோடா!
அம்மாவின் அன்பு!!
நீ பெரிய ஆளா வரனும்டா!
சகோதரிகளின் அக்கறை!!
மச்சான் எங்களை மறந்துடாதடா!
நண்பர்களின் நட்பு!!
தினமும் தொலைபேசியில்
காதலியின் சிணுங்கல்!!
எண்ண ஓட்டத்தினிடையே...
மச்சான் கிளம்புடா, ஆபிசுக்கு டைம் ஆகிடுச்சு
நண்பன் குரல் துபாயில்!
நினைவுகளுக்கு சுபம் போட முடியாது,
ஆகவே "தொடரும்"
பால்கனியில் நான் சில்லென்று
ஒரு காற்று மேனியின் வழியே
மனதினை பதம் பார்த்தது!
சூரிய உதயம் உனக்கு பின்னே வரவேண்டும்!
அப்பாவின் அறிவுரை!!
உடம்ப நல்லா பார்த்துக்கோடா!
அம்மாவின் அன்பு!!
நீ பெரிய ஆளா வரனும்டா!
சகோதரிகளின் அக்கறை!!
மச்சான் எங்களை மறந்துடாதடா!
நண்பர்களின் நட்பு!!
தினமும் தொலைபேசியில்
காதலியின் சிணுங்கல்!!
எண்ண ஓட்டத்தினிடையே...
மச்சான் கிளம்புடா, ஆபிசுக்கு டைம் ஆகிடுச்சு
நண்பன் குரல் துபாயில்!
நினைவுகளுக்கு சுபம் போட முடியாது,
ஆகவே "தொடரும்"
முதன் முதலாய்
என் கருவின் சுமைதனை
சுகமாய் உணர்ந்தவள்
கருவில் எட்டி உதைப்பேன்
ஆனந்தம் அவள் முகத்தில்
மழலை விரல் பிடித்து
நடை பழக்கினாள்
தன் நிலை மறந்து எந்தன்
பசி ஆற்றினாள்
என் தன் கரங்களில்
பேனா புகுத்தினாள்
மனதில் நல்ல
சிந்தனை ஏற்றினாள்
எனக்காக வாழ்ந்தாள்
தன் ஆயூள் முழுவதும்
என் அம்மாவுக்கு
முதன் முதலாய் கவி படித்தேன்
கவியின் வழியே
என் நன்றியையும்...
சுகமாய் உணர்ந்தவள்
கருவில் எட்டி உதைப்பேன்
ஆனந்தம் அவள் முகத்தில்
மழலை விரல் பிடித்து
நடை பழக்கினாள்
தன் நிலை மறந்து எந்தன்
பசி ஆற்றினாள்
என் தன் கரங்களில்
பேனா புகுத்தினாள்
மனதில் நல்ல
சிந்தனை ஏற்றினாள்
எனக்காக வாழ்ந்தாள்
தன் ஆயூள் முழுவதும்
என் அம்மாவுக்கு
முதன் முதலாய் கவி படித்தேன்
கவியின் வழியே
என் நன்றியையும்...
Subscribe to:
Comments (Atom)
