Thursday, March 13, 2008

முதன் முதலாய்

என் கருவின் சுமைதனை
சுகமாய் உணர்ந்தவள்

கருவில் எட்டி உதைப்பேன்
ஆனந்தம் அவள் முகத்தில்

மழலை விரல் பிடித்து
நடை பழக்கினாள்

தன் நிலை மறந்து எந்தன்
பசி ஆற்றினாள்

என் தன் கரங்களில்
பேனா புகுத்தினாள்
மனதில் நல்ல
சிந்தனை ஏற்றினாள்

எனக்காக வாழ்ந்தாள்
தன் ஆயூள் முழுவதும்

என் அம்மாவுக்கு

முதன் முதலாய் கவி படித்தேன்
கவியின் வழியே
என் நன்றியையும்...

No comments: