அதிகாலை வேளை
பால்கனியில் நான் சில்லென்று
ஒரு காற்று மேனியின் வழியே
மனதினை பதம் பார்த்தது!
சூரிய உதயம் உனக்கு பின்னே வரவேண்டும்!
அப்பாவின் அறிவுரை!!
உடம்ப நல்லா பார்த்துக்கோடா!
அம்மாவின் அன்பு!!
நீ பெரிய ஆளா வரனும்டா!
சகோதரிகளின் அக்கறை!!
மச்சான் எங்களை மறந்துடாதடா!
நண்பர்களின் நட்பு!!
தினமும் தொலைபேசியில்
காதலியின் சிணுங்கல்!!
எண்ண ஓட்டத்தினிடையே...
மச்சான் கிளம்புடா, ஆபிசுக்கு டைம் ஆகிடுச்சு
நண்பன் குரல் துபாயில்!
நினைவுகளுக்கு சுபம் போட முடியாது,
ஆகவே "தொடரும்"
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment